தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
2023-02-02@ 01:33:46

திருவொற்றியூர்: திருவொற்றியூர், விம்கோ நகரில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி சிலை வைத்துள்ளனர். இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு தனியார் பேருந்து பின் நோக்கி வரும்போது, விம்கோ நகர் வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக இந்திரா காந்தி சிலை மீது மோதியது. இதில் சிலை சேதமடைந்தது. இதனால், பொதுமக்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த சிலையை ஆய்வு செய்து, பின்னர் துணியால் சிலையை மூடினர். மேலும், போலீசார், பேருந்து ஓட்டுனர் ஜானை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!
உகாதி திருநாள் புத்தாண்டை, நாளை கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
காவல் துறை ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாம்: போலீசாரின் வாரிசுகள் 123 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை!
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!