SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2023-02-02@ 01:04:17

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதற்கு முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் மிக்கி ஆர்தர் (54 வயது) ஏற்கனவே 2016-19ல் தலைமை பயிற்சியாளராக இருந்த நிலையில் மீண்டும் அவரை பணியமர்த்த பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி யு-19 உலக கோப்பையில் களமிறங்கிய அணியின் கேப்டனாக செயல்பட்ட விஷ்மி குணரத்னே (17 வயது), சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமா காஞ்சனா, சத்யா சந்தீபனி ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

* மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரில் களமிறங்க உள்ள மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி (40 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.

* ம.பி. அணிக்கு எதிரான ரஞ்சி காலிறுதியில் பேட் செய்தபோது ஆந்திரா அணி கேப்டன் ஹனுமா விஹாரியின் மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல் இடது கையால் பேட் செய்து போராடியது அனைவரின் பாராட்டுதல்களையும் அள்ளியுள்ளது. அவர் 57 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரியுடன் 27 ரன் எடுத்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்