பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
2023-02-02@ 00:59:53

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பனிச்சறுக்கு போட்டியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 போலந்து வீரர்கள் பலியானார்கள். 21 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் அபர்வத் சிகரத்தில் நேற்று பனிச்சறுக்கு போட்டி நடந்தது. இதில் பங்கேற்க வெளிநாட்டைச் சேர்ந்த 21 பனிச்சறுக்கு வீரர்கள், 2 உள்ளூர் வழிகாட்டிகள் சென்றனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு அவர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாரமுல்லா போலீசார் மற்றும் சுற்றுலாத்துறையின் கூட்டு மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 19 பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் போலந்து சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர். ஹபத்குட் காங்டோரியில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. சுமார் 20 அடி உயரத்திற்கு பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இறந்தவர்கள் கிரிஸ்ல்டோப் (43), ஆடம் கிரெக் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 14,000 அடி உயரமுள்ள அபர்வத் மலைக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!
திடிரேன பற்றி எரிந்த குழந்தைகள் ஐசியூ: நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின
பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி: உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜக முடிவு
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500-ஆக உயர்வு: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்
சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது?.. ஒன்றிய அரசு பதில்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமை மசோதா: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!