காரைக்கால் அருகே இரட்டை கொலை வழக்கில் பெண் சிறையில் அடைப்பு
2023-02-01@ 14:23:30

காரைக்கால் : காரைக்கால் அடுத்த நல்லாத்தூர் மேலபடுக்கை கிராமத்தில் வசித்து வரும் பரமசிவம் மகள் துர்கா லட்சுமி (36). இவருக்கு, அக்கரைவட்டத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததையடுத்து தாய் வீட்டில் தங்கியிருந்தார். ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென அதிகாலை எழுந்த துர்கா லட்சுமி மண்வெட்டியை எடுத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத பச்சிளம் குழந்தை தனு, பாட்டி வேதவல்லி (85), தந்தை பரமசிவம் (75), தாய் தமிழரசி (65), சகோதரர்கள் ஆண்டவர் (45), நடராஜன் (40) ஆகியோரை சரமாரியாக தாக்கியதோடு தன்னையும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
அலறல் சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் துடித்த குழந்தை மற்றும் உறவினர்களை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் துர்கா லட்சுமியின் 3 மாத குழந்தை மற்றும் அவரது பாட்டி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த துர்கா லட்சுமி உட்பட அவரது தாய், தந்தை, 2 சகோதரர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதித்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் குழந்தை
மற்றும் பாட்டியை கொலை செய்ததாக துர்கா லட்சுமியை கைது செய்தனர். அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், துர்கா லட்சுமி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!