புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு
2023-02-01@ 14:11:26

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உள்நாட்டில் செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் செல்போன் உதிரிபாகங்களுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் செல்போன் உற்பத்தி 5.8 கோடியில் இருந்து 31 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது:
* நாடு முழுவதும் 50 இடங்களை தேர்வு செய்து சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்
* நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.
* செயற்கையாக உருவாக்கப்படும் வைரத்துக்கு சுங்க வரி குறைக்கப்படும்
* முதியோர் நிரந்தர வாய்ப்பு தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமகா உயர்வு
* மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் வெளியிட திட்டம்; இந்த திட்டத்தில் 75% வட்டி வழங்கப்படும்; பெண் குழந்தைகள் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை முதலீடு
* வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை 5.9 %-ஆக இருக்கும் என மதிப்பீடு
* உள்நாட்டில் செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் செல்போன் உதிரிபாகங்களுக்கான சுங்கவரி குறைப்பு
* வீட்டுவசதி கடன் திட்டத்துக்கான நிதியை 66% கூடுதலாக உயர்த்தி 79,000 கோடியாக அதிகரிப்பு
* செல்போன் கேமரா, லென்ஸ், பேட்டரி இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு, லித்தியம் பேட்டரிக்கான வரிச்சலுகை தொடரும் என்றும் அறிவிப்பு
* வரி மூலமாக வருவாயை ரூ.23.3 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம்.
* செல்போன், டிவி-க்கான உதிரிபாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு; இதனால் செல்போன், டி.வி. விலை குறையும்
* தங்கம், வெள்ளி வைர நகைகள் மீதான சுங்கவரி உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு; இதனால் தங்கம், வெள்ளி, வைர நகைகளின் விலை உயரும்
* வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு
* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் மீதான சுங்கவரி அதிகரிப்பு
* வருமான வரிக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும் என்று அறிவிப்பு
* புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ் வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரையான வருமானத்துக்கு 5% வருமான வரி
மேலும் செய்திகள்
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்: டெல்லி காந்தி நினைவிடத்தில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு
உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம்: அடுத்தாண்டு மக்களவை தேர்தலால் கூடுதல் நிதி ஒதுக்கீடு
எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்
திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி