மனிதநேய வார நிறைவு விழா ஊட்டியில் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-ரூ.5.62 லட்சத்தில் வழங்கப்பட்டது
2023-02-01@ 12:40:51

ஊட்டி : ஊட்டியில் நடந்த மனிதநேய வார நிறைவு விழாவில் 9 பயனாளிகளுக்கு ரூ.5.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா ஊட்டியில் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். மனிதநேய வார விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற நாட்டியம், நாடகம், பேச்சு, கவிதை, ஓவியம், பாட்டு, திருக்குறள், கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து நிறைவு விழா நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம் தலைமை வகித்தார். தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயங்கள், சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5500 மதிப்பில் தையல் இயந்திரம், சமூக நலத்துைற சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் வைப்பு பத்திரம் வழங்கப்பட்டது.
மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1.70 லட்சம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், தாட்கோ சார்பில் ரூ.3.37 லட்சம் மதிப்பில் 3 பேருக்கு வங்கி கடனுதவி பெறுவதற்கான ஆணை என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.5.62 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் தேவாலா, கப்பாலா, காஞ்சிக்கொல்லி, பொக்காபுரம், குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள், தக்கர்பாபா அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலை பள்ளி, ஊட்டி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஆகியவற்றை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா, தாட்கோ பொது மேலாளர் ரவிச்சந்திரன், ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சனில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வட்டாட்சியர்கள் மகேஸ்வரி, மணிமேகலை, பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் முதன் முறையாக தேசிய அளவிலான பைக் ரேஸ்..!!
அரியலூரில் செந்துறை அருகே உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை 11 வருடத்துக்கு பின் மீட்பு..!!
புதுச்சேரியில் ரேஷன் கடைகளைத் திறக்க ஒன்றிய அரசு, ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளோம்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தகவல்
20 கி.மீ.தொலைவிற்கு ஒருமதுபான கடைதான் உள்ளது என கூற மதுபானம் அத்தியாவசிய பொருளா?.. ஐகோர்ட் கிளை கேள்வி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!