SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2023-02-01@ 12:03:25

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.

ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது:
* உலகிலேயே அதிக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.

* கம்பு சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம்

* கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு

* 8 மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழில் ஈடுபட்டுள்ளார் வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

* விவசாயத்தில் தொழில் முனைவோரை உருவாக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும்

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

* பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்

* 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்

* ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

* மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

*  குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

* கிராமப்புறங்களில் 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

* மோடி ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.

* தேசிய சிஜிட்டல் நூலகத்தை மாநிலங்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்.

* ஏகலைவா பள்ளிகளுக்கு புதிதாக 38,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

* நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு; பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு கடந்த ஆண்டை விட 66% அதிக ஒதுக்கீடு

* அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும், ரூ.10 லட்சம் கோடி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவிகிதமாகும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்