SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலை நிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2023-02-01@ 11:18:07

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.

ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது:

* விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது.
* இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலை நிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்
* கொரோனா காலத்தில் யாரும் பட்டினியில் இருக்க கூடாது என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
* 2023 ஜனவரி 1 முதல் மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
* கொரோனா காலத்தில் 28 மாதங்களில் 80 மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.
* 2014-ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற பின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.
* மோடி பதவியேற்ற பின் உலகின் 5-வது பெரிய பொருளாதாரா நாடாக இந்தியா மாறியுள்ளது.
* 9ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
* பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் 9 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்