கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2023-02-01@ 10:45:06

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக வேலூர் புறப்பட்டார். ரயில் மூலமாக புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (01-02-2023) நண்பகல் 12 மணியளவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 36 மாவட்டங்களில் 2381 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் வேலூரில் மட்டும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சுமார் ரூ.784 கோடி அளவில் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
இதற்காக இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக புறப்பட்டு சென்றுள்ளார். 12.45 மணியளவில் காட்பாடி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்களிடம் இந்த திட்டம் தொடர்பாகவும், மேலும் பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாகவும், சட்ட ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, மாவட்ட விவசாய மகளிர் சுயஉதவி குழுக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிர் ஆகியோரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு பணிகள் தொடர்பாகவும் ஆய்வு கூட்டமானது நடைபெறவுள்ளது.
அதேபோல விஐபி பல்கலை கழகத்தில் கலைஞர் மாணவர் விடுதி மற்றும் ஆய்வக பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் புறப்பட்டு சென்றுள்ளார்.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி