கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
2023-02-01@ 01:29:52

சென்னை: சென்னை மாதவரத்தில், கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மாதவரத்தில் உள்ள கல்லூரி அருகே, ஆட்டோ ஒன்றில் கஞ்சா விற்கப்படுவதாக போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத் துறைக்கு கடந்த 2019, ஜூலை மாதம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த கோட்டைசாமி என்பவரும், சென்னையில் தலைமை செயலகம் அருகே உள்ள சத்யா நகரை சேர்ந்த உதயகுமார் என்பவரும் சேர்ந்து 40 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக 50 கிராம் பாக்கெட்டுகளாக இரு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா வைத்திருந்த கோட்டைசாமி, உதயகுமார் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி வாதிட்டார்.
மேலும் செய்திகள்
காய்கறி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
அதிக வட்டி தருவதாக 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி‘அம்ரோ கிங்ஸ்’ நிறுவன இயக்குநர்கள் 3 பேர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 3 பேருக்கு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறி லாரியில் கடத்திய 80 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!