செல்போன் கடையில் தீ
2023-02-01@ 01:28:20

தாம்பரம்: குரோம்பேட்டை, ராதா நகர் நாயுடு ஷாப் சாலையில், ரமேஷ் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். பூட்டியிருந்த கடையில் நேற்று அதிகாலை புகை வந்து திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிவதைகண்டு, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சம்பவம் குறித்து தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அணைத்தனர். தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், உபரி பொருட்கள் எரிந்து நாசமானது. இன்வெர்ட்டர் மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அதிகபட்சமாக பதிவானது
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: பொது, வேளாண்மை பட்ஜெட் 3ம் நாள் விவாதம் நடக்கிறது
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
போராட்டம் நடத்தினால் சம்பளம் ‘கட்’: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி