SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடியில் கோமா நிலையில் இருந்த காதலன் சாவு

2023-02-01@ 01:27:43

ஆலந்தூர்: சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயிலில், கடந்த 26ம் தேதி இரவு உள்ளகரத்தை சேர்ந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் கைகோர்த்தபடி ரயில் முன் பாய்ந்தனர். இதில், 2 பேரும் தூக்கி எறியப்பட்டதில், காதலி சிம்ரன் (15) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில், காதலன் இளங்கோ தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இளங்கோவனை மீட்டு, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இளங்கோவிற்கு மூளைச்சாவு ஏற்பட்டு, கோமாவிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பயனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை அதே மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உள்ளகரத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்