SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக சென்னையில் 2,546 பேர் மீது வழக்கு பதிவு

2023-02-01@ 01:25:01

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி ஒரு வழிச்சாலையில் வாகனம் ஓட்டியதாக மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,546 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் பல்வேறு சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், மாநகர காவல் எல்லையில் கூடுதல் போக்குவரத்து கமிஷனர் கபில் குமார் சரத்கர் உத்தரவுப்படி, மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் ஒரு வழிப்பாதை மற்றும் எதிர்திசையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வழிப்பாதை மற்றும் தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 2,546 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், சம்பவ இடத்திலேயே 763 வாகன ஓட்டிகள் ரூ.3,81,500 அபராதமாக செலத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்