மனுநீதி நாள் முகாமில் 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
2023-02-01@ 01:19:52

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு 44 பயனாளிகளுக்கு ரூ.6.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்துக்குட்பட்ட பீர்க்கன்காரணை பகுதியில் மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடந்தது. முகாமில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மண்டல குழு தலைவர் டி.காமராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
முகாமில், 44 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, 44 பயனாளிகளுக்கு, ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழஙகப்பட்டன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 23 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதை கலெக்டர் ராகுல்நாத், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மண்டல குழு தலைவர் டி.காமராஜ் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சங்கர், ஹேமாவதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், வட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காசிமேடு சந்தையில் மீன் விலை திடீர் உயர்வு: ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,000 கொடுவா ரூ.800க்கு விற்பனை
இணைப்பு இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு பணி தீவிரம் சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க இலக்கு: லாரி மூலம் சப்ளையை குறைக்க முடிவு
36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம் 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
வந்தே பாரத் ரயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் பயணிக்கலாம்: அதிகாரிகள் தகவல்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி