அமைந்தகரையில் பரபரப்பு தற்கொலைக்கு முயன்ற மனநோயாளி மீட்பு: போலீசார் விசாரணை
2023-02-01@ 01:18:22

அண்ணாநகர்: அமைந்தகரை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மனநோயாளியை பத்திரமாக மீட்ட போலீசார், இதுதொடர்பாக, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் 40 அடி உயர சுவர் மீது, நேற்று முன்தினம் ஒரு வாலிபர் அமர்ந்துகொண்டு குதிக்கப்போவதாக சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீசார், அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரியவந்தது.
போலீசாரின் கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இதன்பிறகு அந்த நபரின் தலைமுடியை வெட்டி புது சட்டை, பேண்ட் அணிவித்தனர். பின்னர், அவரை சென்னையில் உள்ள காக்கும் கரங்கள் இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் வழக்குபதிவு செய்து, அந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
டான்செட், சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி