ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் பலி
2023-02-01@ 01:12:50

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கஷ்டம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(45), சொந்த பணி காரணமாக சென்னை வந்தார். இவர் நேற்று முன்தினம் மெரினா உழைப்பாளர் சிலை அருகே இருந்து காமராஜர் சாலையை கடந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடையாறில் இருந்து மெரினா நோக்கி வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று குணசேகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திண்டிவனம் பகுதியை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் அருண்தாஸ் (30) என்பவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
டான்செட், சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி