மனிதர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் காலநிலை கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்: காலநிலைத்துறை இயக்குநர் பேச்சு
2023-02-01@ 01:08:32

சென்னை: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த காலநிலை குறித்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என காலநிலைத் துறை இயக்குநர் தீபக் பில்கி தெரிவித்துள்ளார். காற்று மாசு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை இயக்குநர் தீபக் பில்கி தொடங்கி வைத்தார். மேலும் காலநிலை மாற்றம் குறித்த உண்மைகளை மாணவர்களுக்கு தெரிவித்தல் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் இடநெருக்கடியால் திணறும் இந்திய நகரங்களில் வாழும் மனிதர்கள் மற்றும் பல்லுயிர்களின் வாழ்வியல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. சென்னையில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நிலவும் காற்றின் தரம் குறித்த மாறுபாடு மற்றும் வட சென்னையில் உயிரை மெதுவாக கொள்ளும் காற்றின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து பேசப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய தீபக் பில்கி கூறியதாவது: மனிதர்களின் நடவடிக்கைகளில் உள்ளார்ந்த மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், கொள்கையில் வெற்றி பெற வழிவகுக்கும்.
காலநிலை குறித்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனிதர்களின் வாழ்வியல் முறை மற்றும் நடவடிக்கைகளை மாற்றுவது என்பது கடினம் தான் என்றாலும் அது முடியாதது என்று இல்லை. பள்ளி மாணவர்களுக்கு இடையே காலநிலை மாற்றம் குறித்த புரிதல் அதிகரிக்க வேண்டும். அனவருக்கும் காலநிலை குறித்த கல்வி அறிவு பெற வேண்டும். அடுத்த தலைமுறையினர் காலநிலையை சீராக வைப்பதில் தலைமை வகிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அதிகபட்சமாக பதிவானது
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: பொது, வேளாண்மை பட்ஜெட் 3ம் நாள் விவாதம் நடக்கிறது
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
போராட்டம் நடத்தினால் சம்பளம் ‘கட்’: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி