SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடைசி டி20ல் இன்று இந்தியா - நியூசி. மோதல்: தொடரை வெல்லப் போவது யார்?

2023-02-01@ 00:43:06

அகமதாபாத்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும்  கடைசி டி20 போட்டி, அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று  இரவு  7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி தலா 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. அடுத்து இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. ராஞ்சியில்  நடந்த முதல் போட்டியில்  நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது.

தொடர்ந்து  லக்னோவில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டி20 அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் இன்றைய ஆட்டம் நடைபெற உள்ளது. லக்னோ ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், 100 ரன் என்ற எளிய இலக்கை துரத்தினாலும் இந்தியா கடுமையாகப் போராடி ஒரு பந்து மட்டுமே மீதம் வைத்து வெற்றியை எட்டியது.
வழக்கமாக பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளும் ‘ஸ்கை’ சூரியா, பொறுப்புடன் அடக்கி வாசித்து 31 பந்தில் 26 ரன் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

அந்த போட்டியில் இரு தரப்பிலும் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசி. இன்னிங்சில் கேப்டன் சான்ட்னர் ஆட்டமிழக்காமல் 19 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இன்று அனல் பறப்பது உறுதி. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகக் கடினம் என்பதை நியூசி. வீரர்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 55 இரு தரப்பு தொடர்களில் இந்தியா 47ல் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்ற புள்ளி விவரமே அதற்கு அத்தாட்சியாக உள்ளது. 2019ல் ஆஸ்திரேலியாவும், 2015ல் தென் ஆப்ரிக்காவும் மட்டுமே இந்திய அணி இங்கு வீழ்த்தியுள்ளன. 2012ல் நடந்த ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில்! மட்டுமே நியூசி. வென்றுள்ளது. மற்ற எந்த இருதரப்பு தொடரிலும் இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்ய முடியாமல் தவித்து வரும் நியூசி. அந்த சோக வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது ஹர்திக் தலைமையிலான இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்