SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தைப்பூசத் திருவிழா பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு 20 நாட்களுக்கு அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

2023-02-01@ 00:31:02

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 20 மாதங்களில் கோயில்களில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்த கையேட்டினை அமைச்சர் வெளியிட்டார்.  கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்பிரியா, தலைமைப் பொறியாளர் ரகுநாதன் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் மாநில அளவிலே இருக்கின்ற மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அனைத்து செயல் அலுவலர் நிலையிலான அலுவலர்களின் 19வது சீராய்வு கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ரூ.3,863 கோடி மதிப்பீட்டிலான பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திருவண்ணாமலை மகாதீபம், திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் என அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் திருவிழாக்களை குடமுழுக்குகளை சிறப்பாக நடத்தியுள்ளோம்.  

தைப்பூசத் திருவிழாவிற்கு பாதையாத்திரையாக வருகைதரும் பக்தர்களுக்கு தினந்தோறும் 10,000 நபர்கள் வீதம் 20 நாட்கள் அன்னதானம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தைப்பூச விழா நடைபெறும் அனைத்தும் கோயில்களிலும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த உத்தரவிட்டுள்ளோம். தைப்பூச விழா சிறப்பாக நடத்தப்படும்.சேலத்தில் பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த கட்சி நிர்வாகி குறித்த செய்தி முதலமைச்சர் கவனத்துக்கு போனவுடன், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

திருவண்ணாமலையில் இது போன்ற இருந்த ஒரு நிலையை, 18 ஆண்டுகளாக அந்த கோயிலில் இருந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து பட்டியலின மக்களை அழைத்துச் சென்று இறை தரிசனம் செய்ய வைத்துள்ளோம். ஆகவே, அனைவரும் சமம் அனைத்து சாதியினரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கை. மற்ற மாநிலங்களில் இருக்கின்ற மாதிரி தமிழ்நாட்டில் இருக்கின்ற கோயில் பிரச்னைகள் இல்லை. பிரச்னைகள் ஏதும் இருந்தால் உடனுக்குடன் தீர்க்கின்ற வகையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மயிலாப்பூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள சிவ ஆலயங்களில் இந்தாண்டு மகா சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் இரவு முழுவதும் நடைபெற இருக்கின்றன என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • freddie-cyclone

  மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

 • patrick-day-1

  அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

 • france-123

  பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

 • sydney-world-record

  புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

 • padmavathi-kumbabhishekam-17

  சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்