SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு பிப்.8ல் எழுத்து தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம்

2023-02-01@ 00:30:58

சென்னை: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்