மின் இணைப்புடன் ஆதார் இணைக்க பிப்.15ம் தேதி வரை கால அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி; இனி கால நீட்டிப்பு கிடையாது
2023-02-01@ 00:30:44

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்.15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு எண்களை அவர்களது ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான, கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்னும் பலர் இணைக்காமல் உள்ளனர். இது குறித்து மின்வாரிய தலைமையகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து உயரதிகாரிகள் பங்ககேற்றனர்.
ஆய்வு கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் கடந்த நவ.15ம் தேதி தொடங்கி நேற்று (ஜன.31ம் தேதி) காலை 11 மணி வரை, 2 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர் தங்களுடைய ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணோடு இணைத்திருக்கின்றார்கள். இதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றி. மொத்தமுள்ள நுகர்வோர்களில் 90.69 சதவீதம் பேர் இணைத்துள்ளனர். வீடுகளை பொறுத்தவரை 2.32 கோடி நுகர்வோர்களில் 2.17 கோடி பேர் இணைத்துள்ளனர்.
இன்னும் 15 லட்சம் பேர் இணைக்க வேண்டும். 74,000 கைத்தறி இணைப்புகளில் 70,000 இணைக்கப்பட்டுள்ளது. விசைத்தறியை பொறுத்தவரை 1.63 லட்சத்தில், 1.52 லட்சம் பேர் இணைத்துள்ளனர். குடிசை வீடுகளை பொறுத்தவரை, 9.44 லட்சம் பேரில் 5.11 லட்சம் பேர் மட்டுமே இணைத்துள்ளனர். விவசாய இணைப்புகள் 23.28 லட்சத்தில் 18.28 லட்சம் பேர் இணைத்துள்ளனர். மீதமுள்ள 9 சதவீதம் மின் இணைப்பு எண்களோடு, ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருகின்ற பிப்.15ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பே அனைத்து நுகர்வோர்களும் 100 சதவீதம் பணிகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
15 நாட்கள் கால நீட்டிப்பு இருப்பதால் வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் கடைசி கட்டத்தில் முயற்சிக்காமல் இன்று முதலே தொடங்கி கால கெடுவிற்கு முன்பாகவே நிறைவு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த 15 நாட்கள் நீட்டிப்பு என்பதே இறுதி வாய்ப்பு. மேலும், கால நீட்டிப்பு வழங்க வாய்ப்புகள் இல்லை. எனவே, இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்தி மின் நுகர்வோர்கள் 100 சதவீதம் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து கொள்ளுமாறு மின் வாரியத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது, கூடுதலாக மின் நுகர்வோர் இல்லத்திற்கே நேரடியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியிணை தொடங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் மின் இணைப்பு எண்கள் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 15 நாட்களுக்குள்ளாகவே 100 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மின் நுகர்வோர் இல்லத்திற்கே நேரடியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியிணை தொடங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Tags:
Time limit to connect Aadhaar with electricity connection until February 15 Minister Senthil Balaji மின் இணைப்புடன் ஆதார் இணைக்க பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் அமைச்சர் செந்தில் பாலாஜிமேலும் செய்திகள்
சாதாரண மனிதனுக்கு என்ன பொருந்துமோ, அது தான் ராகுல் காந்திக்கும்: சட்டத்தின் அடிப்படையிலேயே தகுதி நீக்கம்: அண்ணாமலை பேச்சு
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் பொருட்கள் சேவை,வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி