நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சகோதரர் குத்திக்கொலை
2023-02-01@ 00:29:17

ஈரோடு: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி பொருளாளர் மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். ஈரோடு, முனிசிபல் காலனி, கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன்கள் கெளதம் (30), கார்த்தி (26). இருவரும் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். கார்த்தி நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு சகோதரர்கள் வீட்டில் இருந்தனர். மாணிக்கம்பாளையத்தில் வசிக்கும் அவர்களது தாய் மாமன் ஆறுமுகசாமி (50), அவரது அண்ணன் ஈஸ்வரனின் மகன் கவின் (24) அங்கு வந்துள்ளார். அப்போது, சொத்து பிரச்னை தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை கார்த்தி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். திடீரென ஆறுமுகசாமி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கெளதம், கார்த்தி இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், அண்ணன், தம்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து ஆறுமுகசாமி, கவினை போலீசார் கைது செய்தனர்.
Tags:
We are Tamil party executive brother stabbed to death நாம் தமிழர் கட்சி நிர்வாகி சகோதரர் குத்திக்கொலைமேலும் செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய இருவர் கைது பணிப்பெண்ணிடம் இருந்து 100 சவரன் பறிமுதல்: நகையை வங்கியில் விற்பனை செய்து வீட்டு மனை வாங்கியது அம்பலம்
இணையதள முறைகேடு வழக்கில் கேரள இளைஞர்கள் சிக்கினர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை
கல்லூரி மாணவியிடம் செயின் பறித்தவர் கைது
திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 16 கிலோ பறிமுதல்
செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!