ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
2023-02-01@ 00:28:44

மதுரை: ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தாயும், மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். மதுரை, கரிமேடு நடராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (72). இவரது மகன் உமாசங்கர் (42). கடந்த இரு தினங்களாக இவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வென்டிலேட்டரை உடைத்து பார்த்த போது, தாயும் மகனும் இறந்து கிடந்துள்ளனர். தகவலறிந்து கரிமேடு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அந்த வீட்டிலிருந்து உமாசங்கர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், ``நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை’’ என எழுதப்பட்டிருந்தது.
இதுபற்றி போலீசார் கூறுகையில், உமாசங்கர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு மதுரையில் இருந்தபடி மார்க்கெட்டிங் பணி செய்துவந்தார். தொழில் ரீதியாக பலரிடம் கடன் வாங்கி, ஷேர் மார்க்கெட்டிங் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். இதில், இவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. 10 மாதங்களாக இவர் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். 10 தினங்களுக்கு முன், 2வது மனைவி அவரது தம்பியின் திருமணத்திற்கு வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் தாயும், மகனும் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவித்தனர்.
Tags:
In share market loss mother son poison suicide ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய் மகன் விஷம் தற்கொலைமேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்