மோடிக்கு யார் அதிக விசுவாசம்? கவர்னர்களிடையே போட்டி: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
2023-02-01@ 00:28:02

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு அதிக விசுவாசம் காட்டுவது யார் என்பதில் கவர்னர்களிடையே போட்டி நடப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதுபற்றி மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட பிற எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதிக பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்பும். தற்போது பா.ஜ அல்லாத மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை.
நாங்களும் ஒன்றிய அரசில் இருந்த போது, பல மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருந்தோம். ஆனால் முந்தைய கவர்னர்கள் மாநிலங்களை இப்படி நடத்தவில்லை. இப்போதுதான் மோடிக்கு யார் அதிக விசுவாசமாக இருப்பார்கள் என்பதை காட்டுவதில் கவர்னர்களிடையே போட்டி நிலவுவதை நாங்கள் காண்கிறோம். பொருளாதார ஆய்வறிக்கையிலோ, பட்ஜெட் உரையிலோ எதைச் சொன்னாலும், அதைச் சாதிக்கத் தவறிவிட்டனர். எனவே, இது அனைத்தும் பொய். உங்கள் ஜிடிபி வளர்ச்சி வேகமாக இருக்க வேண்டும். அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை விட 50 மடங்கு சம்பாதிக்கலாம். ஆனால் ஏழைகள் இன்னும் ஏழ்மையில் வாட போகிறார்கள் என்பது மட்டும் நடக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Modi Governor Contest Congress President Kharge Allegation மோடி கவர்னர் போட்டி காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை
நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்
வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்
கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!