7 ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்கள்
2023-01-31@ 17:31:01

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும், தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது டாடா நிறுவனம்தான் எலக்ட்ரிக் வாகன கார் சந்தையில் கோலோச்சி வருகிறது. இதற்கு போட்டியாக பிற நிறுவனங்களும் அடுத்தடுத்து களமிறங்கி வருகின்றன. மாருதி சுசூகி நிறுவனம், சமீபத்தில் நடந்த ஆட்டோ வாகன கண்காட்சியில் முதலாவது எலக்ட்ரிக் கான்செப்ட் காராக, இவிஎக்ஸ்-ஐ காட்சிப்படுத்தியது.
இதன் உற்பத்தி 2025ல் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் அடுத்த 7 ஆண்டுகளில் 6 எலக்ட்ரிக் கார்களைச் சந்தைப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை இதுவரை இந்த நிறுவனம் சந்தைப்படுத்தாவிடினும், இந்திய வாகன விற்பனைச் சந்தையில் 40 சதவீதத்துக்கும் மேலான பங்களிப்பை இந்த நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஓலா ஹோலி எடிஷன்
ஏப்.1 முதல் கார் விலையை 5% வரை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!!
தேர்தல் ஆணையர்கள் நியமனம் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு
எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார்
சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக்
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!