சேலம்- ஓமலூர் இடையே புதிய ரயில்பாதையில் ரயில்வே துறை அதிகாரிகள் ரெயிலில் சென்று சோதனை
2023-01-31@ 09:34:01

சேலம்: சேலம்- ஓமலூர் இடையே புதிய ரயில்பாதையில் ரயில்வே துறை அதிகாரிகள் ரெயிலில் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராய் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் 110 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று பரிசோதித்தனர்.
சேலம் ஓமலூர் இடையே சுமார் 12.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு வழிப்பாதைக் காண தண்டவாளம் அமைக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாத காலமாக இந்த பணி முடிவடைந்து விட்டது. இந்த ரயில் பாதையில் மின்சார கம்பங்கள் அமைக்கும் பணியும் நடந்து வந்தது.
இந்த பணியும் முடிவடைந்துவிட்டது .
இதனிடைய கடந்த ஒரு வார காலமாக புதிய ரயில் பாதையில் ரயில்கள் அதிவேகமாக இயக்கி சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. 100 கிலோமீட்டர் வேகத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு ரயில் பாதை சரியாக அமைக்கப்பட்டு உள்ளதாக பார்க்கப்பட்டது. இந்த ரயில்பாதையில் இன்று ஓமலூரில் இருந்து சேலம் வரை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராய் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தண்டவாளத்தில் ரெயிலில் சென்று சோதனை செய்தனர்.
110கிலோமீட்டர் வேகத்தில் சென்று இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டது. முன்னதாக ரயில்வே துறை அதிகாரிகள் சேலம் ஜங்ஷனிலிருந்து ஓமலூர் வரை டிராலியில் வந்து ரயில் பாதை முழுவதும் சோதனை செய்து பார்த்தனர்.
மேலும் செய்திகள்
கீழடி அருகே திருப்புவனம் பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு
பாஜவில் இருந்து விலகி பேரூராட்சி தலைவி திமுகவில் இணைந்தார்
பெரியாறு அணையில் 10 மாதத்துக்கு பின் இன்று ஆய்வு
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு: தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி