தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
2023-01-31@ 08:44:46

டெல்லி: தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை அதிகாலை தென்கிழக்கு இலங்கை கடற்பகுதியை காற்றுழத்த தாழ்வு மண்டலம் சென்றடையும்.
திருகோணமலைக்கு தென் மேற்கே 455 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்மேற்கே 680 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவருகிறது. தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்ததாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கும் எனவும், அதன் பின்னர் தெற்கு இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை, மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழகத்தில் கனமழை பெய்ய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளையத்தினம் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
நாளை முதல் 3-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி ட்வீட்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை
டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி அருகே போலீஸ் ரோந்து வனப்பகுதியில் வெட்டி கடத்திய 9 செம்மரக்கட்டைகள் பறிமுதல்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!