ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
2023-01-31@ 01:28:58

பெரம்பூர்: பெரம்பூரில் 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பெரம்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் 1 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை மடக்கி விசாரணை செய்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் தலா 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் குமார் சிங் (24) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராம்லால் மண்டோ (54) ஆகிய 2 பேரும் எர்ணாகுளம் விரைவு ரயிலில் வந்து, பெரம்பூரில் இறங்கி அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த, பெரம்பூர் ரயில்வே போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
காய்கறி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
அதிக வட்டி தருவதாக 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி‘அம்ரோ கிங்ஸ்’ நிறுவன இயக்குநர்கள் 3 பேர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 3 பேருக்கு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறி லாரியில் கடத்திய 80 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!