சர்வதேச கிரிக்கெட் முரளி விஜய் ஓய்வு
2023-01-31@ 01:03:38

சென்னை: இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் தொடக்க ஆட்டக்காரராக ஜொலித்தவர் முரளி விஜய் (38 வயது). குறிப்பாக, வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக ரன் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சதம் விளாசி சாதனை படைத்த வீரர்கள் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். தமிழ் நாடு அணிக்காக ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களிலும் விளையாடி முத்திரை பதித்துள்ளார்.
சமீப காலமாக தேர்வுக் குழுவினர் கண்டுகொள்ளாத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். தனக்கு வாய்ப்புகளை கொடுத்து ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள விஜய், ‘எனது வாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் உடன் இருந்து ஆதரவு நல்கிய ரசிகர்களுக்கும் மிகவும் நன்றி’ என்று சமூக ஊடகம் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், வெளி நாடுகளில் நடக்கும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடுவதுடன் கிரிக்கெட்டில் வணிக ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் துருப்பு சீட்டு சூர்யாதான்: அடித்து சொல்கிறார் யுவராஜ்சிங்
முதல் டி 20 போட்டி தென்ஆப்பிரிக்காவை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்!
76 ரன்னில் சுருண்டது இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி
சில்லி பாயின்ட்...
மரியா சாக்கரியை வீழ்த்தினார் பியான்கா
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி