போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
2023-01-31@ 01:02:50

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு விதித்த தடையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. பல இளைஞர்கள் அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்து உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் போதைப்பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதைப் பொருட்கள் இல்லா மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைந்திட வேண்டும்.
மேலும் செய்திகள்
ராகுல் காந்தி பதவி பறிப்பை தொடர்ந்து எம்பி பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்ய சதி: சஞ்சய் ராவத் பேட்டி
சொல்லிட்டாங்க...
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்த சென்னையில் 7 இடங்களில் காங்கிரசார் போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்பு
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, தகுதி நீக்க விவகாரம்; ‘மோடி’ குடும்பப் பெயர் வழக்கின் 4 கதாபாத்திரங்கள் யார்?.. பாஜக எம்எல்ஏ, சினிமா தயாரிப்பாளர், நீதிபதி வரை தகவல்கள்
ராகுல்காந்தி தகுதி நீக்கம் நியாயமற்றது: சரத்குமார் கண்டனம்
ராகுல் காந்தி விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி