சாதி பாகுபாட்டிலிருந்து காக்கும் அவசர சட்டத்தை முன்மொழிந்த சாமா சாவந்துக்கு முதல்வர் பாராட்டு
2023-01-31@ 00:59:27

சென்னை: சாதியப் பாகுபாட்டிலிருந்து காக்க சியாட்டில் பேரவை உறுப்பினர் சாமா சாவந்த் அவசரச் சட்டத்தை முன்மொழிந்ததற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவின் சியாட்டில் பெருநகரப் பகுதியில் வசிக்கும் 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெற்காசிய மக்களைச் சாதியப் பாகுபாட்டில் இருந்து காக்க சியாட்டில் பேரவை உறுப்பினர் சாமா சாவந்த், அவசரச் சட்டத்தை முன்மொழிந்துள்ளதற்கு எனது பாராட்டுகள். எந்த வடிவில் பாகுபாடு இழைக்கப்படுமாயினும் அதனை ஒழிக்க முன்னெடுக்கப்படும் எந்த ஒரு முற்போக்கு நடவடிக்கையும் போற்றத்தக்கது’ என கூறியுள்ளார்.
Tags:
Caste Discrimination Protection Ordinance Proposed Sama Savanthu Chief Minister Appreciation சாதி பாகுபாட்டில் காக்கும் அவசர சட்டம் முன்மொழிந்த சாமா சாவந்து முதல்வர் பாராட்டுமேலும் செய்திகள்
நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு
ரூ.2.13 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ராயபுரம் மாடிப்பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சர்வதேச தரச்சான்று
கிண்டி மேம்பாலத்தில் விபத்து லாரியிலிருந்து டீசல் கசிந்து சாலையில் வழிந்தோடியது
மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போரூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!