நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: கண்ணாடியை உடைத்து தப்பிய பயணிகள்
2023-01-31@ 00:32:49

மேட்டூர்: கோவையிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் புறப்பட்டது. கோவையைச் சேர்ந்த ராஜன்(35) பஸ்சை ஓட்டி சென்றார். 43 பயணிகள் இருந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தர்மபுரி சாலையில் புதுச்சாம்பள்ளிக்கு நேற்று அதிகாலை வந்தபோது பஸ்சின் பின்பகுதியில் இருந்து குபு குபுவென புகை வந்தது. சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. உடனே, டிரைவர் வண்டியை நிறுத்தினர். இதையடுத்து, அனைவரும் முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். சிலர் உடமைகளை அப்படியே விட்டு விட்டு ஜன்னல் வழியாக கண்ணாடியை உடைத்து கிழே குதித்து உயிர் தப்பினர். தகவலின்பேரில், தீயணைப்பு படையினர் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் கோபி குருமந்தூரைச் சேர்ந்த தாமோதரன் (33), அவரது மனைவி வினோதினி (30) உட்பட 13 பேர் தீக்காயம் அடைந்தனர். அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:
In the middle of the road on fire omnibus glass passengers நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் கண்ணாடி பயணிகள்மேலும் செய்திகள்
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி