SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிச்சயம் எதிரொலிக்கும்

2023-01-31@ 00:04:19

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில், ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை, கூட்ட தொடர் மற்றும் குடியரசு தலைவர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல், ஒன்றிய அரசின் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறை குறித்து ‘பிபிசி’ வெளியிட்ட ஆவணப்பட சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும், இந்தியாவில் எதிரொலிக்கும் பிரச்னைகள் குறித்தும் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

நாடு வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாகவும், பொதுமக்கள் செழிப்பாக இருப்பதாகவும் ஒன்றிய அரசு அடிக்கடி கூறி வருகிறது. ஆனால், உண்மையில் நிலைமை தலைகீழாக இருப்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். ‘நாங்கள் நன்றாக இருக்கிறோம்’ என பொதுமக்கள் சொல்ல வேண்டும். இதுதான் உண்மையான வளர்ச்சி. மேலும், ஒன்றிய அரசு மீது எழுந்துள்ள விமர்சனங்களை மறைப்பதற்காக தேவையில்லாத பிரச்னையை எழுப்புவது உள்ளிட்ட வேலைகளில் இனியாவது ஒன்றிய அரசு ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக, இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை குறித்து ஆக்கப்பூர்வமான பதிலை தெரிவிக்க வேண்டும். இவ்விஷயத்தில் மவுனம் காக்க வேண்டாம். நாட்டில் நிலவும் ஒவ்வொரு விஷயங்களிலும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எனவே மக்களை ஏமாற்றும் வேலையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தங்கள் மீது எழுந்துள்ள விமர்சனங்களை மறைக்கும் வகையில் மிரட்டுவது, தடை விதிப்பது உள்ளிட்ட வேலைகளை விட்டு விட்டு, விமர்சனத்திற்கான ஆக்கப்பூர்வமான பதிலை அளிக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. பல்வேறு பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிற்கு கடிதங்களை எழுதி உள்ளது.

‘நீட்’ தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஒன்றிய அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களின் சார்பாக வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனே நடவடிக்கை எடுப்பதும், மற்ற மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் கேட்கிறோம் என்ற பெயரில் காலதாமதம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் கடிதங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? காலதாமதம் செய்வதன் மூலம் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பல்வேறு பிரச்னைகள் குறித்து,
நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எழுப்பும் விவாதங்கள் நிச்சயம் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்