பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்: வியாசர்பாடியில் பரபரப்பு
2023-01-30@ 18:26:02

பெரம்பூர்: வியாசர்பாடியில் இரவு பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் கார்த்திக் (27). இவர் கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணியாற்றுகின்றார். திருமணம் ஆகவில்லை. நேற்றிரவு 10 மணி அளவில், வியாசர்பாடி பகுதியில் சாலையோரம் உள்ள கடையில் பரோட்டா வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கார்த்திக் உள்பட அனைவரும் சாப்பிட்டுள்ளனர். இதன்பிறகு இரவு 11 மணி அளவில், கார்த்திக்கு கடும் வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் மயக்கம் அடைந்துவிட்டார். இதன்பிறகு அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுசம்பந்தமாக எம்கேபி. நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து பரோட்டா பாதிப்பு காரணமாகத்தான் உயிரிழந்தாரா, வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் செய்திகள்
36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம் 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
வந்தே பாரத் ரயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் பயணிக்கலாம்: அதிகாரிகள் தகவல்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி