மூணாறில் களைகட்டும் சீசன் ஸ்ட்ராபெர்ரி கிலோ ரூ.800: அள்ளிச் செல்லும் சுற்றுலாப்பயணிகள்
2023-01-30@ 01:32:27

மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் இந்தாண்டு நிலவும் ‘மைனஸ் டிகிரி’ கடுங்குளிர் புதிய அனுபவமாக மாறி உள்ளதால் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொதுவாக டிசம்பர் மாத இறுதி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தான் மூணாறில் அதிகமான குளிர் இருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மூணாறு பகுதியில் விளையும் கேரட், பீன்ஸ், கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட் போன்ற காய்கறிகளை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுவர்.
அதிலும், மூணாறிலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டவடை ஊராட்சியில் விளையும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், தற்போது சுற்றுலாப்பயணிகள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பகுதியில் வட்டவடை, கோவிலூர், பழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு ‘வின்டர்டோண்’ வகை ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் புனேயில் இருந்து தோட்டக்கலை துறை சார்பில் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.
தற்போது, இந்த வகை ஸ்ட்ராபெர்ரி பழங்கள், வழக்கமான பழங்களைக் காட்டிலும் பெரிதாகவும், அதிக ருசியுடனும் விளைந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே கடும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, ஸ்ட்ராபெர்ரி பழம் விலை உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது.
தற்போது ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூணாறில் வட்டவடை, கோவிலூர் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இப்பகுதியில் பரந்து விரிந்து கிடக்கும் பழத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்களை கண்டு ரசித்துத் திரும்புகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா!
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!