புதுவையில் இன்று ஜி20 மாநாடு துவக்கம்: 75 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு
2023-01-30@ 01:28:03

புதுச்சேரி: புதுவையில் இன்று ஜி 20 மாநாடு துவங்குகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் ஜி 20 மாநாடு புதுச்சேரி மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் இன்று துவங்குகிறது. மாநாட்டில், ஜி 20 நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் சுற்றுச்சூழல், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
மாநாடு முடிந்ததும், ஆரோவில்லுக்கு சென்று பல்வேறு பகுதிகளை பிரதிநிதிகள் பார்வையிடுகிறார்கள். இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, துருக்கி, சுவீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா நேற்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று மதியம் புதுச்சேரிக்கு வந்த பிரதிநிதிகளை அவரும் மாவட்ட ஆட்சியர் வல்லவனும் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
மேலும் செய்திகள்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்-முசிறி அருகே பரபரப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!