பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றம் பழநியில் தைப்பூச திருவிழா கோலாகல தொடக்கம்: பிப்.3ல் திருக்கல்யாணம், 4ம் தேதி தேரோட்டம்
2023-01-30@ 01:26:21

பழநி: பழநியில், தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா நேற்று காலை கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கினர்.
கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, பூர்ணாகுதி போன்ற சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலின் உட்பிரகாரங்களை சுற்றி கொடி எடுத்து வரப்பட்டது. காலை 9.30 மணியளவில் மீன லக்னத்தில் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருவிழா கொடியேற்றப்பட்டது. விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வருவார்.
தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, கானாடுகாத்தான், கண்டனூர் உட்பட 96 ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் காவடி எடுத்து பழநிக்கு புறப்பட்டனர். இந்த பாரம்பரியம் 450 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.
மேலும் செய்திகள்
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா!
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!