ஆளே இல்லாத கடையில டீ ஆத்தும் செங்கோட்டையன்
2023-01-30@ 01:19:21

ஈரோடு, அசோகபுரம் பகுதியில் தேர்தல் பணிக்குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை நிர்வாகிகள் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். இந்தத் தேர்தலில் எங்களது களப்பணி வரலாற்றில் இல்லாத வகையில் அமைய உள்ளது. எனவே வெற்றி எனும் இலக்கை எளிதில் அடைவோம்.
இது அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வியக்கத்தக்க மாற்றத்தை உருவாக்கும். அது டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கும். எங்கள் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்துக்கு பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அதிமுக, தமாகா கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னர் இன்னும் வேகமாக இருக்கும். கூட்டணி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
மக்களை பொறுத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் எங்களிடம் இதை வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர்’ என்று தெரிவித்தார். இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்று இதுவரை முடிவாகவில்லை. ஓபிஎஸ் அணியா? இபிஎஸ் அணியா? பாஜவா என்று அவர்களுக்குள்ளே பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால், இரட்டை சிலை சின்னம் முடக்கப்படும்.
நிலைமை இப்படி உள்ள நிலையில் வேட்பாளர் யார், சின்னம் எது என ஒண்ணுமே தெரியாத நிலையில் செங்கோட்டையன் பிரசாரம் செய்து வருவதாக கூறுவது ஆளே இல்லாத கடையில யாருக்கு இவர் டீ ஆத்துறாரு என கட்சியினரே கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ரெட் நோட்டீஸ் பட்டியலில் சோக்சி நீக்கம் நண்பனை ஒன்றிய அரசு காப்பாற்றி விட்டது: காங்கிரஸ் கடும் தாக்கு
சொல்லிட்டாங்க...
தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரிய திட்டம் இல்லை: எடப்பாடி பேட்டி
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28ம் தேதி பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதம்
பாஜ தனித்து போட்டியிட நெல்லையில் போஸ்டர்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!