SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜீவ்காந்தி சாலையில் ஓடும் காரில் தீ: போக்குவரத்து பாதிப்பு

2023-01-29@ 18:16:27

துரைப்பாக்கம்: ராஜீவ்காந்தி சாலையில் நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதமானது.
சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (38). இவர் நேற்றிரவு சோழிங்கநல்லூரில் தனது காரை சர்வீஸ் முடித்து வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்தபோது, ஓடிக்கொண்டிருந்த காரின் முன்பகுதியில் கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் அந்த கார் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதில் பிரசாந்த் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் துரைப்பாக்கம் தீயணபை்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, காரில் பரவிய தீயை முற்றிலும் அணைத்தனர். இவ்விபத்தில் அந்த கார் முழுமையாக எரிந்து சேதமானது. இப்புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவினால் கார் தீப்பிடித்ததா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்