அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை!: வெளியுறவு அமைச்சர் பேச்சு
2023-01-29@ 15:54:31

புனே: நான் ஒன்றிய அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘நமது அண்டை நாடான சீனா, வழக்கத்திற்கு மாறான அண்டை நாடு. நமக்கு நிறைய அண்டை நாடுகள் உள்ளன. ஆனால், சீனா சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அல்லது சூப்பர்பவர் நாடாக மாறலாம். சக்தி வாய்ந்த நாட்டுக்கு அருகில் வசிப்பது என்பது நமக்கு சவாலான விசயங்களில் ஒன்றாக இருக்கும்.
தென்சீன கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய கடல் பரப்புகளை சீனா ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தென்சீன கடல் பகுதியில் தனது படையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதால், பிற நாடுகளுக்கு கோபம் ஏற்படும் வகையிலான தூண்டி விடும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்து உள்ளது.
அணு சக்தி நாடான பாகிஸ்தானை பொருத்தமட்டில், பாண்டவர்கள் தங்களது உறவினர்களை தேர்ந்தெடுக்க முடியாது. நாம், நமது அண்டை நாட்டினரை தேர்ந்தெடுக்க முடியாது. இதுவே நமக்கு உண்மையாகவும் உள்ளது. நல்ல விசயங்கள் நடக்கும் என்று நம்புவோம். நான் ஒன்றிய அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டது இல்லை. பிரதமர் மோடியை தவிர, வேறு யாரும் என்னை அமைச்சராக்கி இருக்கமாட்டார்கள்; அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
மேலும் செய்திகள்
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!
வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!