தமிழ்நாட்டில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
2023-01-29@ 15:49:33

சென்னை: தமிழ்நாட்டில் ேநற்று சூரிய ஒளி மூலம் 4725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்து கொண்டே வருகிறது.
அனல் மின் நிலையம், அணுமின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் காற்று மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். செலவு குறைவாக சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் உள்ளது. முக்கியமாக ஆசியாவிலேயே தமிழ்நாட்டில்தான் காற்றாலை மூலம் அதிகம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் சூரிய ஒளி மூலம் 4725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘‘தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகம் உச்சம் தொட்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி