ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
2023-01-29@ 08:42:12

ஈரான்: ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் கோய் நகரில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 23.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் மாகாண தலைநகரான தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் இது உணரப்பட்டது.
ஈரானிய செய்தி நிறுவனம் தகவல் படி, இந்த நடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் செய்திகள்
சீனாவிடம் கடன் வாங்குவதில் வங்கதேசம் கவனமாக உள்ளது: ஷேக் ஹசீனா தகவல்
மோடி கொடுத்த பரிசு பற்றி கணக்கு காட்டவில்லை: டிரம்ப் மீது குற்றச்சாட்டு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி: சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
இங்கிலாந்து பிரதமரிடம் இந்திய மாணவர்கள் மனு
இந்திய தூதர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை
ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்து பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!