SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு பிப்.1ல் கலந்தாய்வு

2023-01-29@ 01:42:05

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் போன்ற பட்டயப்படிப்புகளுக்கு 2022-2023ம் கல்வியாண்டிற்கு 2036 விண்ணப்பங்கள் பெறப்பெற்றன. இவற்றில் 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 27ம் தேதி www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு கடந்த 28ம் தேதி துவங்கியது.
இன்று (30ம் தேதி) வரை நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வில் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் மாலை 5 மணிக்குள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாட இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும்.

இது குறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதார்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்த கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும். வரும் பிப்ரவரி 1ம் தேதி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்விற்கான வழிமுறைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர் விவரங்களை  www.tnau.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். விபரங்களுக்கு 0422-6611345 என்ற தொலைபேசி மூலமாகவும், ugadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்