பழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளின்படியே மண்டல பூஜை நடக்கிறது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்
2023-01-29@ 01:40:54

சென்னை: பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை, தைப்பூசத் திருவிழாவால் எந்த தடையும் இல்லாமல் ஆகம விதிப்படியே நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ஆர் ரமேஷ் என்பவர் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவிலேயே நடைபெறுகிறது. ஆகம விதிப்படி நடைபெறவில்லை. தைப்பூச திருவிழா நடைபெறுவதால் மண்டல பூஜை தடைபட வாய்ப்புள்ளது. எனவே, ஆகம விதிப்படி மண்டல பூஜை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் பொறுப்பு தலைமை நீதிபதி வீட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்து அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தைப்பூசத் திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடைபடாது. 48 நாட்கள் மண்டல பூஜையில் 11 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். இறுதி நாளில் 1008 சங்கு பூஜைகள் நடைபெறும். ஆகம விதிப்படியே அனைத்தும் நடைபெறுகிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Tags:
Palani Murugan Temple Mandal Pooja as per Agama Rules High Court Charity Department பழனி முருகன் கோயில் ஆகம விதிகளின்படி மண்டல பூஜை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறைமேலும் செய்திகள்
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி