ரூ.3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த இங்கிலாந்து சுற்றுலா பயணிகள்
2023-01-29@ 01:38:33

குன்னூர்: நீலகிரி மலை ரயிலை ரூ.3.60 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல் சக்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் ரூ.3.60 லட்சம் செலுத்தி இந்த மலை ரயிலை நேற்று வாடகைக்கு எடுத்தனர்.
காலை 10 மணிக்கு கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இந்த மலை ரயில் புறப்பட்டது. இதில், 16 பேர் கொண்ட குழுவினர் மட்டுமே பயணம் செய்தனர். குகை, பாலம், வனவிலங்குகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தவாறு உற்சாகமாக பணம் செய்தனர். மதியம் 1.30 மணி அளவில் குன்னூர் வந்தடைந்தனர். குன்னூரில், பாரம்பரியமிக்க மலை ரயிலின் லோகோ பணிமனையை பார்வையிட்டு நூற்றாண்டு பழமை மிக்க நீராவி இன்ஜின் இயக்கத்தை பற்றி கேட்டறிந்து, அதன்பின் குன்னூர் ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். இது குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ்டஹர் கூறுகையில், ``கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தோம். முதலில் டார்ஜிலிங், சிம்லா சுற்றுலா முடித்து இந்த மலை ரயிலில் குன்னூருக்கு நீராவி இன்ஜின் மலை ரயிலில் வந்தோம். இதில் பயணம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
Tags:
Rs.3.60 Lakhs Rent Nilgiri Hill Train Travel UK Tourists ரூ.3.60 லட்சம் வாடகை நீலகிரி மலை ரயில் பயணம் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள்மேலும் செய்திகள்
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!