ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி
2023-01-29@ 01:32:12

தன்பாத்: ஜார்கண்டில் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் மருத்துவரான தம்பதியர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். ஜார்கண்டில் உள்ள தன்பாத் பகுதியில் ஒரே கட்டிடத்தில் வீடு மற்றும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகின்றது. இந்த மருத்துவமனையில் உள்ள அறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீ பற்றியுள்ளது. மளமளவென பரவிய தீ மருத்துவமனை முழுவதும் பரவியது. தீ கட்டிடம் முழுவதும் பரவியதால் அதில் இருந்தவர்கள் யாராலும் வெளியே வரமுடியவில்லை. இதனிடையே மருத்துவமனை தீப்பற்றி எரிவது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின்பேரில் 6 தீயணைப்பு துறை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் விகாஷ் ஹஸ்ரா, அவரது மனைவியும் மருத்துவருமான பிரேமா ஆகியோர் புகையினால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் அவர்களது உறவினர் சோகன் கமாரி மற்றும் உதவியாளர் தாராதேவி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்தனர். மேலும் மருத்துவர் ஹஸ்ராவின் செல்லபிராணியான நாயும் இதில் உயிரிழந்தது.
தீயில் கருகி உயிரிழந்துள்ள மற்றொரு நபர் யார் என அடையாளம் கண்டறியப்படவில்லை. காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தம்பதியர் பெங்களூர் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். மருத்துவம் படித்து முடித்த பின் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். தீ விபத்தில் மருத்துவ தம்பதி உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:
In Jharkhand private hospital fire doctor couple 5 people died ஜார்கண்டில் தனியார் மருத்துவமனை தீ டாக்டர் தம்பதி 5 பேர் பலிமேலும் செய்திகள்
அச்சுறுத்தல் ஏதும் இல்லை: கொரோனா பரவலுக்கு உருமாறிய வைரஸ் தான் காரணம்.. மாஸ்க் அணிந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!
இலவச மின்சாரம் கேட்டு ஒடிசாவில் விவசாயிகள் போராட்டம்: போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஊர்வலம்
புதுச்சேரியில் மருத்துவ பூங்கா அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கோரி ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடிதம்..!!
லண்டனில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு முயற்சிக்கு சீக்கியர்கள் எதிர்ப்பு: டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் முன்பு திரண்டு போராட்டம்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 வருடங்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை : ராகுல் காந்தி அறிவிப்பு!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!