ஒன்றிய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை தவறாக குறிப்பிடுவதா? ராமதாஸ் கண்டனம்
2023-01-29@ 01:01:10

சென்னை: ஒன்றிய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் ‘தமிழ்நாயுடு’ என குறிப்பிட்டுள்ளதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில், சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான ஒன்றிய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் ‘தமிழ்நாயுடு’ (TamilNaidu) என்று குறிப்பிடப்பட்டுள்ளது இது கண்டிக்கத்தக்கது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை.
அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரை தேடித் தரும். ஒன்றிய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். www.mygov.in இணையதளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Ramadoss condemns union government's website for wrongly naming Tamil Nadu ஒன்றிய அரசின் இணையதளம் தமிழ்நாட்டின் பெயரை தவறாக ராமதாஸ் கண்டனம்மேலும் செய்திகள்
தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் :ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சு!!
கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 124 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!
கூட்டணி குறித்து கேட்காதீங்க... அது மேலிடம் பார்த்துக்கும்... அண்ணாமலை கப்சிப்
இபிஎஸ், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்: சசிகலா பேட்டி
ராகுல் பதவி பறிப்பு அராஜக நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கண்டனம்
நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி