வயது வந்தவர்களுக்கு மட்டும் என சான்று பெறும் திரைப்படத்தை மைனர்கள் பார்க்க அனுமதிப்பதை எதிர்த்து வழக்கு: தணிக்கைத்துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
2023-01-29@ 01:00:31

சென்னை: திரையரங்கங்களில் திரையிடப்படும் திரைப்படங்களை காண்பதற்கு சென்சார் போர்டு சான்றிதழ் அடிப்படையில் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்னேவ் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு சென்சார் போர்டின் தணிக்கை சான்றிதழ் பெறப்படுகிறது. யு என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், ஏ என்ற சான்றிதழ் வயது வந்தவர்களுக்கு மட்டும், யுஏ என்ற சான்றிதழ் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி காண்பது, எஸ் என்ற சான்றிதழ் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் என்று வழங்கப்படுகிறது.
ஆனால் பல தியேட்டர்களில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை காண மைனர்களையும் அனுமதிக்கிறார்கள். இதுகுறித்து மத்திய திரைப்பட தணிக்கை துறை தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. திரையிடுதல் சட்டத்தின்கீழ் இதுபோன்ற செயல்பாடுகள் குற்றமாகும். தியேட்டர்களில் பணியாற்றுபவர்கள் ஏ சான்றிதழ் படங்களை திரையிடும்போது 18 வயதுக்கு குறைந்தவர்களை அனுமதிக்க கூடாது. இதுதொடர்பான மத்திய தணிக்கைத்துறையின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர கண்டிப்பாக கடைபிடிக்கும்படி உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தணிக்கை துறைக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறைக்கும் நான் அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பிரஷ்னேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, கார்ட்டூன் படங்களைகூட 7 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க கூடாது என்று விதி உள்ளது. ஆனால், இப்போதெல்லாம் வீடுகளில் சிறு குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், திரையிடப்படும் திரைப்படம் 3 மாதங்களில் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகிறது. இதை எப்படி சரிசெய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்யுமாறு ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:
Adult obtaining evidence film case against minors Censorship to consider iCourt வயது வந்தவர் சான்று பெறும் திரைப்பட மைனர்கள் எதிர்த்து வழக்கு தணிக்கைத்துறை பரிசீலிக்க ஐகோர்ட்மேலும் செய்திகள்
வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!