கடுங்குளிர்,பயணிகள் குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
2023-01-29@ 00:49:28

சென்னை: கடுமையான குளிர் காரணமாக, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விமானங்களில் பயணிக்கும், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை ஐதராபாத், கொல்கத்தா, இலங்கை செல்லும் ஆகிய 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ பயணிகள் விமானமும், இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல் ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ விமானமும், கொல்கத்தாவில் இருந்து அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 2 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, அதிகாலை 3.15 மணிக்கு, புறப்பட்டு செல்லும். அந்த 2 விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, கடுமையான குளிரால் பயணிகள் வரத்து குறைந்துள்ளது. அதனால் 6 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரிய ரக விமானங்களை தேவையான பயணிகள் இல்லாமல் இயக்க முடியாது” என்று தெரிவித்தார்.
Tags:
Bad weather shortage of passengers Chennai 6 flights cancelled கடுங்குளிர் பயணிகள் குறைவால் சென்னை 6 விமானங்கள் ரத்துமேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி