போலி நகைகளை அடகு வைத்து ரூ.1.84 லட்சம் அபேஸ் செய்தவர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை
2023-01-28@ 01:30:24

தண்டையார்பேட்டை:புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடகு கடை நடத்தி வருபவர் நரேஷ் ஜெயின் (36). இவரது கடையில் கடந்த 24ம் தேதி புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர், 25 கிராம் நகைகளை கொடுத்து, தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும் கூறி ரூ.92 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார்.
அதேபோல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடகு கடை நடத்தி வரும் தினேஷ் ஜெயின் (38) என்பவரது கடையில் 25 கிராம் நகைகளை கொடுத்த மணிகண்டன், அதே காரணத்தை கூறி ரூ.92 ஆயிரத்தை பெற்று சென்றுள்ளார். இந்த நகைகளை அடகு கடை உரிமையாளர்கள் சோதனை செய்தபோது, போலி நகை என்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அடகு கடை உரிமையாளர் நரேஷ் ஜெயின், தினேஷ் ஜெயின் ஆகிய 2 பேரும் புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்து, ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது-₹4.50 லட்சம் மதிப்பிலான 11 வாகனங்கள் பறிமுதல்
குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் போஸ்டர் ஒட்டி தேடிய பிரபல ரப்பர் ஷீட் திருடன் கூட்டாளிகளுடன் கைது-1,150 ரப்பர் ஷீட், 300 கிலோ பாத்திரங்கள் பறிமுதல்
கெங்கவல்லி அருகே வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடியவர் கைது-சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்
செஞ்சி அருகே தகாத உறவால் கணவரை கொலை செய்ய முயற்சி-மனைவி, காதலன் கைது
புதுமாப்பிளை கொலை கோர்ட்டில் 2 பேர் சரண்
கோவை நீதிமன்றம் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்: வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி